ADDED : அக் 14, 2026 05:09 AM

அ நிறம் | அளவு
மொரப்பூர்:திருப்பூரில்
இருந்து தொட்டம்பட்டிக்கு கோழித்தீவனம் ஏற்றிய லாரி நேற்று
வந்தது. ஆனந்த் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
மொரப்பூர் -
மருதிப்பட்டி சாலையில், காலை, 8:00 மணிக்கு சென்றபோது சாலை வளைவில்
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில்,
தொழிலாளர்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தால் சிறிது
நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொரப்பூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.
