UPDATED : நவ 19, 2024 05:38 AM
ADDED : நவ 19, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 முதல், 8:30 மணி வரை, அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் பனிமூட்டம் நிலவியது.
இதனால், சாலையில், பஸ், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் அவதியடைந்தனர்.

