/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உணவு பொருள் கடத்தல், பதுக்கல்; தகவல் அளிக்க போன் எண் அறிவிப்பு
/
உணவு பொருள் கடத்தல், பதுக்கல்; தகவல் அளிக்க போன் எண் அறிவிப்பு
உணவு பொருள் கடத்தல், பதுக்கல்; தகவல் அளிக்க போன் எண் அறிவிப்பு
உணவு பொருள் கடத்தல், பதுக்கல்; தகவல் அளிக்க போன் எண் அறிவிப்பு
ADDED : மே 03, 2024 07:35 AM
தர்மபுரி: உணவுப்பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை, தமிழ்நாடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் அறிவித்தனர்.தமிழ்நாடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தலைவர், ஜோஷி நிர்மல்குமார் உத்தரவின்படி, அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்க, தர்மபுரி உணவு பொருள் கடத்தல் மற்றும் தடுத்தல் போலீசார் தீவிர பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு கோயம்புத்துார் மண்டல எஸ்.பி., சந்திரசேகரன் அறிவுரை படி, தர்மபுரி மாவட்டத்தில், உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண், 1800 599 5950 அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தர்மபுரி எஸ்.ஐ., கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும், தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில், கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட சுவரொட்டியை ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.