/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
/
பாலக்கோடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
பாலக்கோடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
பாலக்கோடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை
ADDED : செப் 21, 2024 07:35 AM
பாலக்கோடு: ''பாலக்கோடு அருகே, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என, பாலக்கோடு வன அலுவலர் நடராஜ் எச்சரிக்கை விடுத்-துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டம், பாலக்-கோடு தாலுகா, வாழைதோட்டம், ஜோடிசுனை அருகே, சிறுத்-தைகள் நடமாட்டம் காணப்படுகிறது. வனத்தை ஒட்டியுள்ள ஒரு-சில இடங்களில், நாய் மற்றும் கோழிகளை வேட்டையாடிதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதேபோல், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் குறித்த தகவல் அளித்தனர். உடனடியாக, குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று, பொதுமக்க-ளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வாழைத்தோட்டம், ஜொடிசுனையை சேர்ந்த பொது-மக்கள் பகல் மற்றும் இரவு
நேரங்களில் வனப்பகுதிக்கு செல்-வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.