/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
/
ஒற்றை யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை
ADDED : டிச 19, 2025 06:57 AM
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, ஒற்றை யானை நட-மாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கை: எர்ரன-அள்ளி காப்புக்காடு பகுதியில், ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால், கொல்லஅள்ளி, வாழைத்தோட்டம், செங்கோடப்பட்டி, காவேரி-யப்பன் கொட்டாய், கூசுகல், எருதுகூடஅள்ளி, பொப்பிடி, நிலகுட்டஅள்ளி, தீபஅள்ளி, பெல்ரம்-பட்டி கூட்ரோடு, காட்டுமாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மாலை, 6:00 முதல், காலை, 7:00 மணி வரை, தேவை-யின்றி வெளியே நடமாட வேண்டாம். வீட்டிற்கு வெளியே மற்றும் வயல்வெளி பகுதிகளுக்கு இயற்கை உபாதை கழிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், வயலுக்கு நீர் பாய்ச்ச இரவில் செல்வதை தவிர்ப்பதுடன், குடிசை, கொட்டகை மற்றும் வீட்டிற்கு வெளியில் படுக்க வேண்டாம், யானை நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரி-விக்கவும், அனைத்து பொதுமக்களும் பாதுகாப்-பாக இருந்து, வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

