ADDED : மே 08, 2026 02:35 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஓய்வுபெற்ற ராணுவ வீரர், 'போக்சோ'வில் கைதானார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி சிறுமி, 10ம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு, வீட்டில் இருந்தார். மே, 5ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, உறவினர் வீட்டிற்கு சிறுமியின் பெற்றோர் சென்றனர்.
அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சரவணன், 51, பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து, பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். தர்மபுரி மகளிர் போலீசார், போக்சோவில் சரவணனை நேற்று கைது செய்தனர்.
