/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
17 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
/
17 ஆண்டுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
ADDED : அக் 23, 2025 12:55 AM
சூளகிரி, சூளகிரி அடுத்த அட்டகுறுக்கி கிராமத்தில், 2015ம் ஆண்டு வரை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது.
இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால், வேறு இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு செயல்படுகிறது. பழைய பள்ளி துவக்கப்பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக இருந்தபோது, 2007 - 2008ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர், 17 ஆண்டுக்கு பின், நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சந்தித்து கொண்டனர்.
பல்வேறு இடங்களில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வந்தவர்கள் ஒன்றாக சந்தித்து, தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தங்களுக்கு பாடம் கற்று கொடுத்த ஆசிரியர்களான சங்கீதா மேரி, ஏஞ்சலின், மேரி சகாயம், உமா, பகு குணா, விஜிலா ஆகியோருக்கு, பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். பின்னர் கேக் வெட்டி, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ந்தனர். குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.