/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மோசடியாக பட்டா மாற்றம் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
/
மோசடியாக பட்டா மாற்றம் வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 23, 2024 03:59 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் பி.துரிஞ்சிப்பட்டி, ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த குப்பன் என்பவருக்கு சொந்தமான, ஆதிதிராவிடர் நிபந்தனைக்கு உட்பட்ட நிலம், வேறொரு சமுதாயத்தை சேர்ந்தவருக்கு, நிபந்தனையை மீறி விற்பனை செய்யப்பட்டது.
இதில், பொம்மிடி வி.ஏ.ஓ., சுமதி, நிபந்தனை மீறி பட்டா மாற்றம் செய்ய, மேலதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் ராஜேந்திரன் பேரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டது. வி.ஏ.ஓ., சுமதி மீது வரப்பெற்ற பல தொடர் புகார்களின் அடிப்படையில், அரூர், ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் விசாரணை மேற்கொண்டார். இதில், வி.ஏ.ஓ., சுமதி பரிந்துரை படி, நிபந்தனைக்கு உட்பட்ட நிலத்தை மேலதிகாரிகள் பட்டா மாற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பொம்மிடி வி.ஏ.ஓ., சுமதியை, 'சஸ்பெண்ட்' செய்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார்.