sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா


ADDED : நவ 15, 2025 01:58 AM

Google News

ADDED : நவ 15, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லம்பள்ளி: அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 349 மாணவர்களுக்கு இலவச சைக்கிளை மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று வழங்கினார். தொடர்ந்து, அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 110 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 படிக்கும், 5,521 மாணவர்கள், 6,414 மாணவியர் என, 11,935 மாணவர்க-ளுக்கு சைக்கிள்கள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தினமான இன்றைய தினம் அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 349 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. நாள்தோறும் சைக்கிள் பயன்படுத்துவது சிறந்த உடற்பயிற்சியாகவும் விளங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரி பா.ம.க.,- - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்-மையினர் நல அலுவலர் பண்டரிநாதன், நல்லம்பள்ளி தாசில்தார் பிரசன்ன மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 367 மாணவ மாணவிய-ருக்கு, 17.67 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., மதிவாணன் ஆகியோர் மாணவர்க-ளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.

மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 பயிலும், 14,514 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன. முதற் கட்டமாக இன்று, 367 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்-துறை அலுவலர் பத்மலதா, மாவட்ட சி.இ.ஓ., மதன்குமார், பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us