/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தகராறில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற நண்பர்
/
தகராறில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற நண்பர்
தகராறில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற நண்பர்
தகராறில் கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற நண்பர்
ADDED : ஆக 15, 2025 03:10 AM
அதியமான்கோட்டை, தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை கவுண்டர் தெருவை சேர்ந்த சென்ட்ரிங் கூலித்தொழிலாளி ராஜ்குமார், 28. இவர் மனைவி அபிநயா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர், சென்னை திருவெற்றியூரில், 2ம் நிலை காவலராக பணிபுரியும் அவரது உறவினரான தாமோதரன், 30. இருவரும் நண்பர்கள்.
அதியமான்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஊருக்கு வந்த தாமோதரனுக்கும், ராஜ்குமாருக்கும், அதியமான்கோட்டை ஏரிக்கரையில் தகராறு ஏற்பட்டுள்ளது. மாலை, 6:00 மணிக்கு மீண்டும் ஏரி கரைக்கு இருவரும் சென்றபோது, தாமோதரனை, ராஜ்குமார் கத்தி
யால் குத்த முயன்றுள்ளார். அப்போது, தாமோதரன்
கத்தியை பிடுங்கி ராஜ்குமாரை குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பலியானார். தாமோதரனை, அதியமான்கோட்டை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில், மாவட்ட
எஸ்.பி., மகேஸ்வரன், விசாரணை மேற்கொண்டார்.