தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இலக்கியம்பட்டியில் குப்பையால் சுகாதார சீர்-கேடு

இலக்கியம்பட்டியில் குப்பையால் சுகாதார சீர்-கேடு

இலக்கியம்பட்டியில் குப்பையால் சுகாதார சீர்-கேடு


ADDED : ஜூன் 07, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி; தர்மபுரி அருகே, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்-பட்ட விருட்பாட்சிபுரம் அக்ரிநகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பஞ்., நிர்வாகம் சார்பில், குப்பைகளை சேகரிக்க குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்-ளன. தொட்டிகளில் கொட்டப்படும் குப்பை பல வாரங்கள் வரை அப்புறபடுத்தாமல் உள்ளதால், குப்பை அதிகரித்து குவிந்து கிடப்பதுடன், அருகி-லுள்ள சாலையில் குப்பை சிதறி கிடக்கிறது. மேலும், மாவட்டத்தில் அவ்வப்போது, மழை பெய்து வருவதால், குவிந்து கிடக்கும் குப்பை துர்நாற்றம் வீசி வருகிறது. இது குறித்து, பஞ்., நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரி-வித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்-றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில், அகற்றப்படாத குப்பையால் சுகாதார சீர்-கேடு ஏற்படுவதை தடுக்க, அப்பகுதியினர் குப்-பைக்கு தீ வைத்துள்ளனர். இதில், குப்பையுடன் சேர்ந்து, குப்பை தொட்டியும் எரிந்தது. பஞ்., நிர்-வாகத்தின் மெத்தன போக்கால், பல்வேறு இடங்-களில் இதுபோல குப்பை தொட்டிகள் குப்பை-யுடன் சேர்ந்து எரிக்கப்படுகிறது. இதில், அரசு நிதி வீணாவதுடன், குப்பை சுகாதாரமின்றி சாலை-யோரம் கொட்டி செல்லும் நிலை தொடர்கிறது. எனவே, பஞ்., நிர்வாகம் குப்பையை முறையாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us