ADDED : செப் 20, 2026 03:09 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., கலைச்செல்வி தலைமையில், குப்பை தரம் பிரித்து வாங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் ஈரக்கழிவுகளை பச்சை நிற கூடையிலும், உலர்ந்த கழிவு-களை நீல நிற கூடையிலும், சுகாதார கழிவுகளை சிவப்பு நிற கூடையிலும், மருத்துவ கழிவுகளை கறுப்பு நிற கூடையிலும் பிரித்து வாங்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், வீடுகளில் சேகரிக்-கப்படும் தினசரி குப்பையை தள்ளுவண்டியின் மூலம், தெருக்-களில் சேகரிக்கப்படும் 'ஹாட்ஸ்பாட்' எனப்படும் சிறிய அளவி-லான குப்பையை மின்கலன் வண்டியில் பெற வேண்டும். 'பல்க் வேஸ்ட்' எனப்படும் பொது இடங்களில் பெரும்பான்மையாக காணப்படும் குப்பையை சிறிய லாரிகள் மூலம் அகற்ற தெரிவிக்-கப்பட்டது.இப்பயிற்சியில் ஊராட்சி செயலாளர்கள், மக்கள் நலப்பணியா-ளர்கள், சுகாதார ஊக்குவிப்பாளர் உள்ளிட்ட துாய்மை பணியா-ளர்கள் கலந்து கொண்டனர்.
