ADDED : பிப் 27, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த முத்தானுாரை சேர்ந்த, 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்துள்ளார். வீட்டிலிருந்த அவர், தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார்.
கடந்த, 24ல் காலை, 10:30 மணிக்கு தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் புகார் படி, அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
