/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை
/
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை
ADDED : ஜூலை 30, 2025 01:55 AM
நல்லம்பள்ளி, தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் வாரச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை ஆட்டு சந்தை கூடியது.
இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, ஆடுகளை வாங்க, விற்க வந்திருந்தனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஆடி பெருக்கை முன்னிட்டு, ஆட்டு சந்தையில், 850க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவை, 5,000 ரூபாய் முதல், 35,000 ரூபாய் வரை எடைக்கு ஏற்றவாறு விற்பனையானது. விற்பனை அதிகரித்ததால், நேற்றைய சந்தையில், 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.