/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்ச்சி
/
இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்ச்சி
இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்ச்சி
இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரசு கல்லுாரி மாணவர்கள் தேர்ச்சி
ADDED : டிச 28, 2024 02:42 AM
தர்மபுரி: தர்மபுரி, அரசு கலைக்கல்லுாரி தேசிய மாணவர் படையில் பயின்ற இரு மாணவர்கள், இந்திய ராணுவத்தில் பணிபுரிய தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தர்மபுரி, அரசு கலைக்கல்லுாரியில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை ராணுவப்பிரிவில், ராகுல், கவியரசன் ஆகிய இரு மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இந்திய ராணு-வத்தில் பணிபுரிய, துணைநிலை ராணுவ பணிக்கு நடந்த தேர்வில் இவர்கள் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான பணி
நியமன ஆணையை, இக்கல்லுாரி முதல்வர் (பொ) ராஜேந்திரன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இந்த இரு மாணவர்
களையும் துறை சார்ந்த தலைவர்கள் கெளரவன், திருமால் ஆகியோர் பாராட்டினர். தொடர்ந்து, இந்த மாணவர்களுடன் பயின்ற மாணவர்கள் மற்றும் தற்போது ராணுவ பிரிவில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் என பலரும், துணை ராணுவ பணிக்கு சென்ற மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்-தனர். நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை, இக்கல்லுாரி தேசிய மாணவர் படை அலுவலர் தீர்த்தகிரி செய்திருந்தார்.