ADDED : ஜூலை 13, 2025 01:48 AM
தர்மபுரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், எழுச்சி நாள் கருத்தரங்கம் தர்மபுரி சி.ஐ.டி.யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை வகித்தார்.
மாநில துணை பொதுச்செயலாளர் அண்ணா குபேரன் பேசினார். மாவட்ட செயலாளர் தெய்வானை, மாவட்ட பொருளாளர் அன்பழகன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், வனத்துறை ஊழியர்கள், கணினி இயக்குனர்கள், மகளிர் திட்ட ஊழியர்கள், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் தொகுப்பூதிய ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவனை பணியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், பெறுபவர்களுக்கு காலமுறை ஊவூதியம் வழங்க வேண்டும்.
அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்து, இளைஞர்களுக்கு காலமுறை ஊதிய நடைமுறையில் பணி வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.