/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு
/
அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு
ADDED : அக் 28, 2024 04:11 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஓ., அலுவலகத்தில், 15வது வட்ட கிளை மாநாடு நேற்று முன்தினம், வட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. வட்ட செயலாளர் சுதாகர், பொருளாளர் தங்கராசு, மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னிலை வகித்தனர்.
இதில், தமிழ்நாடு பொது நுாலகத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சண்முகம், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகேஸ்வரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் தர்மன், துணைத் தலைவர் கோபிநாத், பி.டி.ஓ., கிருஷ்ணன், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாரி கருணாநிதி, மாவட்ட செயலாளர் தெய்வானை ஆகியோர் பேசினர். மாநாட்டில், வாணியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரை, ஆலாபுரம், ஓந்தியாம்பட்டி தென்கரைக்கோட்டை ஏரி-களில் முழுமையாக நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களின் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்-டத்தை நிறைவேற்ற வேண்டும். சிறப்பு காலம் முறை ஊதியம், தொகுப்பு ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு, முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில்.
புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வட்ட பொருளாளர் தங்கராசு நன்றி கூறினார்.