/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மல்யுத்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
/
மல்யுத்த போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : அக் 28, 2024 04:08 AM
தர்மபுரி: நாகர்கூடல், அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், கிரப்பிலிங் மல்யுத்த போட்டியில், 12 பதங்கங்களை வென்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் கடந்த, 20 அன்று மாநில அளவி-லான கிராப்பிலிங் மல்யுத்த போட்டி நடந்தது. இதில், தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, நாகர்கூடல் பஞ்., கூலி கொட்டாய் அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அதில், வயது மற்றும் எடை உள்-ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் நடந்த போட்-டியில் பங்கேற்ற மாணவர்கள், 12 பதக்கங்களை வென்றனர்.
தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணி தலை-மையில், மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று முன்தினம் பள்-ளியில் நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவ, மாணவியரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், போட்-டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர். மேலும், மாணவர்களுக்கு பயிற்சியளித்த, தர்மபுரி மாவட்ட மல்யுத்த பயிற்சியாளர் தங்கபாண்டியன், துணை பயிற்சியாளர் சந்தோஷ் ஆகியோருக்கு வாழ்த்து
தெரிவித்தனர்.