/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாநில கைப்பந்து போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
/
மாநில கைப்பந்து போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில கைப்பந்து போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில கைப்பந்து போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : செப் 24, 2024 02:08 AM
பாப்பிரெட்டிப்பட்டி, : பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாண-வர்கள், மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இந்திய விளையாட்டு குழுமத்தின் சார்பில் கிருஷ்ண-கிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியில் கைப்பந்து தேர்வு போட்டி நடந்தது.
இதில் பல்வேறு கல்வி மாவட்டங்களை சேர்ந்த, 250 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவர் இளமாறன், 9ம் வகுப்பு மாணவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் பழனியம்மாள்,
உடற்கல்வி ஆசி-ரியர்கள் ஜெகஜீவன்ராம், ஜெகன்குட்டிமணி ஆகியோரை, தலைமை ஆசிரியர் அப்துல் அஜீஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.