/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
/
அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ADDED : செப் 06, 2024 07:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லுாரி முதல்வர் ரவி (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024-2025 கல்வியாண்டிற்கான இளங்கலை பாடப்பிரிவுகள் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முதல், வரும், 9 வரை நடக்கிறது. சேர்க்கையின் போது மாணவர்கள், 7 ஆவணங்களை, 3 நகல்களாக கொண்டு வர வேண்டும். விண்ணப்பப்படிவம், அசல் மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உட்பட தங்கள் பெற்றோருடன் வர வேண்டும்.
அதேபோல், முதுநிலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணிதவியல், கணினி அறிவியல் ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை நேற்று முதல் வரும், 17 வரை நடக்கிறது. சேர்க்கையின் போது மாணவர்கள், 7 ஆவணங்களை, 3 நகல்களாக கொண்டு வர வேண்டும். விண்ணப்பப்படிவம், அசல் மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், இளங்கலை மதிப்பெண் பட்டியல், தொகுப்பு மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உட்பட தங்கள் பெற்றோருடன் வர வேண்டும்.சேர்க்கை பெற்ற மாணவர்கள், சேர்க்கை கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.