ADDED : மார் 09, 2024 01:34 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், கடகத்தூர் பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி ஆண்டு விழாவில், தலைமையாசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். ஆசிரியை பத்மினி ஆண்டறிக்கை வாசித்தார்.
மேற்பார்வையாளர் கவிதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதாசுகுமார், ஆசிரியர் பானுரேகா, கடகத்தூர் பஞ்., தலைவர் ஐவண்ணன் ஆகியோர் பேசினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
ஏற்பாடுகளை ஆசிரியை தங்கசெல்வி செய்திருந்தார். ஆசிரியை உமாராணி நன்றி கூறினார்.
