/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பசுமைப்படை போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
/
பசுமைப்படை போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
ADDED : நவ 06, 2024 01:21 AM
தர்மபுரி, நவ. 6-
மூக்கனஹள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடந்த, பசுமைப்படை போட்டியில் வெற்றி பெற்றனர்.
தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பாக, பள்ளி அளவிலான போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர் நேற்று, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் மாவட்ட அளவில் நடந்த, ஒன்றிய அளவிலான பிரிவு பசுமைப்படை போட்டியில் ஆறு பேர் பங்கேற்றனர். ஓவியப்போட்டியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் திகிஷ் முதல் பரிசு, பேச்சு போட்டியில் மீனாட்சி மூன்றாம் பரிசு, எட்டாம் வகுப்பு மாணவிகள் கட்டுரை போட்டியில் ஷாலினி முதல் பரிசு, ஓவியப்போட்டியில் ஷாமினி மூன்றாம் பரிசு பெற்றனர். ஷாலினி, ஷாமினி இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பசுமைப்படை ஆசிரியர் நெடுமாறன்
உடனிருந்தார்.