/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொழிலாளர் தினத்தையொட்டி நாளை கிராம சபை கூட்டம்
/
தொழிலாளர் தினத்தையொட்டி நாளை கிராம சபை கூட்டம்
ADDED : ஏப் 30, 2025 01:29 AM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 251 கிராம பஞ்.,களில் தொழிலாளர் தினம் கிராம சபைக்கூட்டம் மே, 1 அன்று காலை, 11:00 மணிக்கு நடத்தப்பட உள்ளது. இதில், பஞ்., செயலர்கள் ஏற்பாடுகளை மேற்கொள்வர். இதில், ஒவ்வொரு பஞ்.,க்கும் ஒரு பற்றாளர், ஒன்றியத்திற்கு உதவி இயக்குனர் நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிராம சபையில், பஞ்., நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஆன்லைன் மூலம் வீட்டுமனை மற்றும் கட்டட அனுமதி வழங்குதல், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை ஆன்லைனில் செலுத்துவதை உறுதிப்படுத்துதல். மேலும், சிறப்பு பொருளாக, அனைத்து பஞ்.,களிலும் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடவு செய்து, பசுமையான தர்மபுரி மாவட்டமாக மாற்றம் செய்ய உறுதி கொள்ளுதல். பஞ்.,களில் குடிநீர், சுகாதாரம் மற்றும் தெருவிளக்கு தொடர்பான புகார்கள் இருந்தால், அதை தெரிவிக்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டறையின் கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வட்டார அளவில் புகார் தெரிவிக்க, பி.டி.ஓ., (கி.ஊ), மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் மற்றும் பஞ்., செயலர்களின் தொலைபேசி எண்களை பஞ்., அலுவலகங்களில் எழுதப்பட்டுள்ளது. அந்த எண்ணில் புகார் அளிக்கலாம்.
எனவே, கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், பஞ்.,ல் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

