ADDED : செப் 28, 2026 01:45 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை-யத்தால் நடத்தப்படும் 'குரூப் - 1' முதல்நிலை தேர்வில் 1,496 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையத்தால், நடத்தப்படும் 'குரூப் - 1' முதல்நிலைத்தேர்வு தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை, 9:30 மணி முதல், மதியம், 12:30 மணி வரை, 25 தேர்வு மையங்களில் நடந்தது. மொத்தம், 7,644 தேர்வெழுத விண்ணப்-பித்த நிலையில், 6,148 பேர் தேர்வெழுதினர். தேர்வில், 1,496 'ஆப்சென்ட்' ஆகினர். தர்மபுரி அருகே, குண்டலப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'குரூப் - 1' எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வு மையத்தை பார்வை-யிட்ட பின், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கி-ணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 1 பதவிகளுக்கான நேரடி நியமனம் செய்ய, முதல்நிலை எழுத்து தேர்வு, 13 மையங்களில் நடந்தது. தேர்வுக்கு, 3,844 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 2,676 பேர் தேர்வு எழுதினர். 1,168 பேர் தேர்வு எழு-தவில்லை. மின்சாரம், குடிநீர், கழிப்பிட வசதி, போலீஸ் பாது-காப்பு, போக்குவரத்து வசதி, நடமாடும் மருத்துவக்குழுக்கள் உள்-ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு, அவர் கூறினார்.
