/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொலை வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்
/
கொலை வழக்கில் இளைஞர் மீது குண்டாஸ்
ADDED : பிப் 17, 2024 12:28 PM
தர்மபுரி: காரிமங்கலம் அருகே பெரியமிட்டஹள்ளியை சேர்ந்த சரவணன், 36. தொழிலாளியான இவருக்கு ஒண்டிப்புளியமரம் என்ற பகுதியில் நிலம் உள்ளது. இதில் கடந்த ஆண்டு டிச.,31-ம் தேதி சிலர் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, அவ்வழியே சென்ற சரவணன் தன் நிலத்தில் மது அருந்தியவர்களை கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மது அருந்திக் கொண்டிருந்த கும்பல் சரவணனை கத்தியால் தாக்கி கொலை செய்தனர்.
இது தொடர்பாக, காரிமங்கலம் போலீசார் கடந்த ஜன., 1ல், கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னிஹள்ளியை சேர்ந்த பிரகாஷ், 25, கோபிநாத், 23, விக்னேஷ், 27, இளங்கோ, 25, பழையபேட்டை முனியப்பன், 21, காரிமங்கலம் அடுத்த முக்குளம் தமிழரசன், 23, உள்ளிட்ட, 10 பேரை கைது செய்தனர். கொலையின் தன்மையை கவனத்தில் கொண்டு, வழக்கின் முதலாவது குற்றவாளியான பிரகாஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, மாவட்ட எஸ்.பி.,ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார்.
மாவட்ட கலெக்டர் சாந்தி அனுமதி அளித்த நிலையில், ஏற்கெனவே கைதாகி சேலம் சிறையில் உள்ள பிரகாஷ் மீது, குண்டர் சட்டத்தில் வழக்கு பதிந்து, அதற்கான நகலை சேலம் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.