ADDED : மார் 22, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர் : தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே உள்ள பாளையம் சுங்கசாவடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த, டாடா, 407 வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், வாகனத்தின் உட்பகுதியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தியது தெரிய வந்தது. அதை தொடர்ந்து, வாகனத்தை முழுமையாக சோதனை செய்ததில், 60 மூட்டைகளில், 450 கிலோ எடை கொண்ட, 3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், வாகனத்தை ஓட்டி வந்த பெங்களூருவை சேர்ந்த கிரண், 31, என்பவரை தொப்பூர் போலீசார் கைது செய்து, குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

