/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.9.23 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்
/
ரூ.9.23 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்
ADDED : அக் 06, 2024 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., அமர்நாத் மற்றும் போலீசார், மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகப்படும்படி நிறுத்தியிருந்த ஈச்சர் லாரியை சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக தடை செய்த புகையிலை பொருட்கள் இருந்தன. அவை, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கடத்தி செல்வது தெரியவந்-தது. லாரியில் இருந்த, 9.23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1,525 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 7 லட்சம் ரூபாய் மதிப்-புள்ள லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்-தலில் ஈடுபட்ட லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்