ADDED : டிச 20, 2024 01:10 AM
ஜவுளி கடையில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர் கைது
அரூர், டிச. 20-
அரூர் அடுத்த சின்னாங்குப்பத்தை சேர்ந்த, 21 வயது பெண், 2 ஆண்டுகளுக்கு முன், நாச்சினாம்பட்டியிலுள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது, அவருடன் பணியாற்றிய பொய்யப்பட்டியை சேர்ந்த ரமேஷ், 29, என்பவர், அப்பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அப்பெண் மறுத்துள்ளார். கடந்த, 6 மாதமாக அரூரிலுள்ள ஜவுளி கடை ஒன்றில் அப்பெண் பணியாற்றி வருகிறார். ரமேஷ் ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, 11:15 மணிக்கு ஜவுளி கடைக்கு வந்த ரமேஷ், அப்பெண்ணை திட்டியதுடன், திடீரென கையில் வைத்திருந்த தாலி கயிற்றை பெண்ணின் கழுத்தில் கட்டியுள்ளார். அப்பெண் தாலி கயிற்றை கழற்றி வீசியுள்ளார். ஆத்திரமடைந்த ரமேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அரூர் போலீசார், ரமேஷை கைது செய்தனர்.
அரூர், தமிழக ஹயர்கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன், அரூர் தாலுகா சங்க, 9வது கூட்டம் அரூரில் நடந்தது. சங்க தலைவர் வாசன் தலைமை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். பொருளாளர் ஆனந்தன் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பித்தார். கூட்டத்தில், 2025ல் சங்க கட்டடம் கட்ட பூமி பூஜை போட முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 2025ம் ஆண்டு மாநில சங்கத்தின் புதிய காலண்டர் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் மாதவன், சுப்பிரமணி, மணவாளன், ராஜாவேல், செல்வம், வெங்கடாசலம், சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.