/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆயுத பூஜைக்கு பூக்கள் அறுவடை தீவிரம்
/
ஆயுத பூஜைக்கு பூக்கள் அறுவடை தீவிரம்
ADDED : அக் 10, 2024 01:31 AM
ஆயுத பூஜைக்கு பூக்கள் அறுவடை தீவிரம்
தர்மபுரி, அக். 10-
தர்மபுரி மாவட்டத்தில், பூ சாகுபடிக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதில், அதிக லாபம் தரக்கூடிய சாமந்தி பூவை பயிரிடுகின்றனர். மாவட்டத்தில், பாலகோடு, மாரண்டஹள்ளி, பஞ்சபள்ளி, காரிமங்கலம், கம்பைநல்லுார், மொரப்பூர், நல்லம்பள்ளி, தொப்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் பூ சாகுபடி நடக்கிறது. அறுவடை செய்த பூக்கள், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள பூ மார்க்கெட், தொப்பூர் மற்றும் ராயக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இவை ஓசூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்செங்கோடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பெங்களூரு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
நாளை ஆயுத பூஜையையொட்டி, சாமந்தி, செண்டுமல்லி, கோழிகொண்டை உள்ளிட்ட பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும், பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடையில் ஈடுபட்டுள்ளனர். இதில், நேற்று பூ மார்க்கெட்டில், ஒரு கிலோ சாமந்தி, 100 முதல், 150 ரூபாய், கோழிகொண்டை பூ, 80 ரூபாய் வரை விற்பனையான நிலையில், இன்று மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. கடந்த, 2 ஆண்டுக்கு பின், ஆயுத பூஜை சமயத்தில், சாமந்தி பூ விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.