/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு கல்லுாரி மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு
/
அரசு கல்லுாரி மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு
ADDED : ஜூலை 31, 2024 07:21 AM
அரூர்: அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாணவியருக்கான மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் மங்கையர்கரசி, மகளிர் திட்ட மாவட்ட பயிற்றுனர் பெருமாள் பேசுகையில், ''கல்லுாரியில் படிக்கும் மாணவியர் மாதவிடாய் காலத்தில் உடலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். காலை உணவை உட்கொள்வது மிக அவசியம். சத்தான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். வாழ்க்கையில் சுகாதாரத்தை பேணிக்காப்பது மாணவியரின் கடமையாகும். நோய், நொடியின்றி வாழ, சுகாதாரமான பழக்க வழக்கங்களை பின்பற்றுவது மிக அவசியம்,'' என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, வட்டார இயக்க மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.