/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வத்தல்மலையில் கனமழை பல இடங்களில் மண்சரிவு
/
வத்தல்மலையில் கனமழை பல இடங்களில் மண்சரிவு
ADDED : அக் 26, 2024 07:03 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல்மலை கடல் மட்டத்திலிருந்து, 3,000 அடி உயரத்திலும், தர்மபுரி நகரில் இருந்து, 25 கி.மீ., தொலைவிலும் உள்ளது. 12 கி.மீ., மலைப்பகுதி சாலையில், 24 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
சின்னாங்காடு, பால்சிலம்பு, பெரியூர், ஒன்றிக்காடு, கொட்லாங்காடு, மண்ணாங்குழி, குழியனுார், பெரியூர், நாயக்கனுார் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஒரு வாரமாக, தர்மபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து பெய்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கன மழையால் நேற்று அதிகாலை, 4, 8, 9 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு விழுந்தன.
பஞ்., நிர்வாகம் சார்பில் சாலையில் இருந்த கற்கள், பாறைகள் நேற்று காலை அப்புறப்படுத்தப்பட்ட பின், போக்குவரத்து சீரானது.
இந்நிலையில், மண் சரிவு ஏற்பட்டது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.