ADDED : மே 01, 2026 02:58 AM

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. காற்றுக்கு பாப்பிரெட்டிப்பட்டி பேத்தம்பட்டி வாணியாறு பகுதியில் பனை-மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. பள்ளிப்பட்டியில் இருந்து கள்ளத்துக்காடு செல்லும் தார் சாலையோர புளியமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மின் கம்-பிகள் அறுந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது. உடனடியாக மின்-வாரிய
ஊழியர்கள் விரைந்து மரத்தை அப்புறப்படுத்தினர்.
ஏ.பள்ளிப்பட்டி கிராமம், சமத்துவபுரம், அதிகாரப்பட்டி கோட்ட-மேடு கிராமம், சாலுார் இந்திரா நகர் உள்ளட்ட பகுதிகளில் பலத்த காற்றால் வீட்டின் கூரை சேதமானது. வெங்கடசமுத்திரம் பிரவீன்குமார் என்பவரின் வாழை தோட்டத்தில், 20க்கும் மேற்-பட்ட வாழை மரங்கள் காற்றுக்கு அடியோடு சாய்ந்தன. தமிழர் மறுவாழ்வு முகாமில், 2 புங்கன் மரங்கள் சாய்ந்து விழுந்தன. நேற்று மாலையும் பாப்பிரெட்டிப்பட்டி கடத்துார், பொம்மிடி பள்ளிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடைந்த மின்கம்பங்கள்
அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், நேற்று மாலை, 5:00 மணி முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் அரூரில் பல்-வேறு இடங்களில் வைத்திருந்த வணிக நிறுவனங்களின் விளம்-பர பலகைகள் காற்றில் துாக்கி வீசப்பட்டன. கீழானுார், குரும்-பட்டி, பொய்யப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்கம்-பங்கள் கீழே உடைந்து விழுந்தன. இதனால், அரூர் மற்றும் பல்-வேறு கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
