/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஈரோட்டில் இரண்டாம் நாளாக இடியுடன் கூடிய கன மழை
/
ஈரோட்டில் இரண்டாம் நாளாக இடியுடன் கூடிய கன மழை
ADDED : நவ 17, 2024 01:48 AM
ஈரோட்டில் இரண்டாம் நாளாக
இடியுடன் கூடிய கன மழை
ஈரோடு, நவ. 17-
வடகிழக்கு பருவமழை காரணமாக, ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மதியம், 12:00 மணியளவில் இடியுடன் கூடிய கன மழை திடீரென கொட்டியது. 40 நிமிடங்கள் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளான ஆர்.கே.வி சாலை, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, காளைமாட்டு சிலை, வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நின்றது.
இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் சிரமத்துக்கு ஆளாகினர்.
அதேபோல் பவானி, காளிங்கராயன்பாளையம், லட்சுமி நகர் பகுதிகளில் மழை கொட்டியது. மேலும் தவிட்டுப்பாளையம், சந்தியபாளையம், செம்புளிச்சாம்பாளையம், பிரம்மதேசம், காட்டுப்பாளையம், முனியப்பன்பாளையம், வேம்பத்தி பகுதிகளிலும் மழை பெய்தது. மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் கன மழை கொட்டியது. தொடர் மழையால் ஈரோட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மழை நின்ற பின் பெரும்பாலான சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
நேற்று காலை 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 44.30 மி.மீ மழை பதிவானது. மற்ற இடங்களில் பெய்த மழையளவு விபரம்(மி.மீ):
மொடக்குறிச்சி,- 9, பெருந்துறை, -13, சென்னிமலை, -9, பவானி, -19, கவுந்தப்பாடி, -12.40, அம்மாபேட்டை-, 2.20, வரட்டுப்பள்ளம் அணை, -0.40, கோபி, -5.20, எலந்தகுட்டை மேடு, -4.80, கொடிவேரி அணை, -10, குண்டேரிப்பள்ளம் அணை, -1.40, நம்பியூர், 2, சத்தி, -25, பவானிசாகர் அணை, -5.80, தாளவாடி, 4.30 மி.மீ. மழை பெய்தது. சத்தியில் மழைக்கு இரு ஆடுகள் பலியானதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.