/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போச்சம்பள்ளியில் கன மழை: விளை நிலங்களில் புகுந்த தண்ணீர்
/
போச்சம்பள்ளியில் கன மழை: விளை நிலங்களில் புகுந்த தண்ணீர்
போச்சம்பள்ளியில் கன மழை: விளை நிலங்களில் புகுந்த தண்ணீர்
போச்சம்பள்ளியில் கன மழை: விளை நிலங்களில் புகுந்த தண்ணீர்
ADDED : அக் 05, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி சிப்காட்டில், மழை நீர் வடிகால் கால்வாய் இல்லாததால் விளை நிலங்களில் மழைநீர் புகுந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, விவசாய பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஓசூர் மற்றும் ஊத்தங்கரை பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் கன மழை பெய்தது. நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி ஊத்தங்கரையில், 13.20 மி.மீ., ஓசூரில், 10.10, பாம்பாறு அணையில், 9 மி.மீ., பதிவாகி இருந்தது.
போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் பெய்த கனமழையால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய மழை நீர், வடிகால் வசதி இன்றி அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்தது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது.
அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'சிப்காட்டில், மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கவில்லை. கால்வாய் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தை, தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது, பயிர்கள், மரங்கள் நீரில் மூழ்கி அழியும் நிலை ஏற்படுகிறது. எனவே, சிப்காட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க வேண்டும்,' என்றனர்.