ADDED : செப் 21, 2026 02:11 AM

பாலக்கோடு: பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 118 மி.மீ., அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்-களில் பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. நேற்று முன்-தினம் இரவு முதல் நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவ-ரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக மாரண்டஹள்ளியில், 188 மி.மீ., மழை அளவு பதிவானது. அதைத்தொடர்ந்து பென்னா-கரம், 58, ஒகேனக்கல், 57, பாலக்கோடு, 36, அரூர், 21.4, தர்ம-புரி, 15, நல்லம்பள்ளி, 10, பாப்பிரெட்டிப்பட்டி, 7, மொரப்பூர், 5 என மாவட்டத்தில் மொத்தம், 327.4 மி.மீ., மழை-யளவு, பதிவானது. இதில், அதிகப்படியான மழைப்பொழிவு பதிவான மாரண்ட-ஹள்ளி பகுதியில் சாஸ்திரமுட்லு, அத்திமுட்லு உள்ளிட்ட சுற்-றுவட்டார பகுதி நீரோடைகளில் பகுதிகளில் கடும் வெள்ளப்பெ-ருக்கு ஏற்பட்டது. சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்-ளது. மேலும், பள்ளத்தாக்கான பகுதியிலுள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. நேற்று காலை மழை நீரை, மக்கள் அப்புறப்ப-டுத்தினர்.
