ADDED : ஜன 21, 2026 10:52 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடந்த வருடம் பெய்த மழையால், ஒரு சில நீர் நிலைகள் நிரம்பின. மாவட்டத்தில் வாணியாறு, சின்னாறு என, 2 அணைகள் முழு கொள்ளளவை எட்டின. மேலும், கடந்த டிச., மாதத்தில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
அதே சமயம் பனிப்பொழிவு இன்றி குளிர் வாட்டி வதைத்தது. மார்கழி மாதம் நிறைவடைந்து தை மாதம் தொடங்கிய நிலையில் நேற்று தர்மபுரி, நல்லம்பள்ளி, இண்டூர், தொப்பூர், அதியமான் கோட்டை உட்பட சுற்றுவட்டார பகு-தியில் அதிகாலை முதல் கடுமையான மூடு பனி நிலவியது.
இதில், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை முழு-மையாக மூடிய மூடுபனியால், வாகன ஓட்டிகள் தங்கள் வாக-னத்தை குறைந்த வேகத்தில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி இயக்கினர். கடும் பனி மற்றும் குளிரால் கிராம பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளில் முடங்கினர்.

