/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 3 நாட்கள் நிறுத்தம்
/
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 3 நாட்கள் நிறுத்தம்
ADDED : ஜன 21, 2025 06:15 AM
தர்மபுரி: பராமரிப்பு பணியால், தர்மபுரி மாவட்டத்தில், 4 பேரூராட்சிகள், 68 பஞ்.,களில், 3 நாட்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினி-யோகம் நிறுத்தப்படுவதாக, மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்-துள்ளார்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், தர்மபுரி மாவட்-டத்தில் பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 10 பஞ்.,கள், காரி-மங்கலம் ஒன்றியத்தில், 26 பஞ்.,கள் பாலக்கோடு ஒன்றியத்தில், 32 பஞ்.,கள், மற்றும் பாலக்கோடு,
பாப்பாரபட்டி, காரிமங்கலம் மற்றும் மாரண்டஹள்ளி பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்-பட்டு வருகிறது. மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிகள், நாளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்-ளது. மேலும்,
பாலக்கோடு, மூங்கில்பட்டி அருகே, பிரதான 1,500 மி.மீ., இரும்பு குடிநீர் குழாயில் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணி நடக்க உள்ளதால், நாளை ஜன., 23 முதல் ஜன., 25 வரை, 3 நாட்கள் ஒகேனக்கல் குடிநீர்
வழங்க இய-லாது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள மக்கள், 3 நாட்கள் உள்ளூர் நீர் ஆதாரங்களில் இருந்து பெறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.