/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓசூர் அசுர வளர்ச்சி கலெக்டர் பெருமிதம்
/
ஓசூர் அசுர வளர்ச்சி கலெக்டர் பெருமிதம்
ADDED : செப் 29, 2025 02:09 AM
ஓசூர்;கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பு சார்பில், போக்குவரத்து சீரமைப்பு பணியில், போலீசாருடன் இணைந்து பணியாற்றும் டிராபிக் வார்டன்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், டிராபிக் வார்டன்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பேசியதாவது:
ஓசூரில், சிப்காட் பகுதி யில் நடக்கும் மேம்பால பணிகள் தாமதமாக நடக்கின்றன. அக்., மாதத்திற்குள் பணிகள் முழுமை அடைந்து விடும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உறுதி அளித்துள்ளது. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால், தீபாவளிக்கு முன்பே பால பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என கேட்டேன். இந்த மேம்பால பணிகள் நிறைவடைந்தால் மட்டுமே, பத்தலப்பள்ளி பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அனுமதி வழங்கப்படும் என அழுத்தம் கொடுத்ததால் தான், தேசிய நெடுஞ்சாலைத்துறையும் ஒப்பு கொண்டுள்ளது.
கோபசந்திரம் மேம்பால பணிகளும் நிறைவு பெறும் என நம்பலாம். கடந்த மூன்று ஆண்டுகளாக, ஓசூர் மிக வேகமாக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.