ADDED : நவ 26, 2026 02:31 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வெங்கட
சமுத்திரம் தரப்பு அண்ணா நகரில் வசிக்கும், 100க்கும் மேற்பட்டோரில், 50க்கும் மேற்பட்டோர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி குடியிருப்புவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அரூர் ஆர்.டி.ஓ., ஹரி பிரியங்கா நேரில் ஆய்வு செய்து குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். இதில், 54 பேருக்கு பட்டா வழங்க குடியிருப்புவாசிகளிடம் விசாரணை நடத்தினார். ஆய்வின் போது, தாசில்தார் லட்சுமி, ஆர்.ஐ., சண்முக பிரியா, வி.ஏ.ஓ.,
கற்பகம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
