/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர் கைது
/
மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர் கைது
ADDED : ஜூன் 24, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த சென்னத்துாரை சேர்ந்த கட்டட மேஸ்திரி வடிவேல், 29; இவர் மனைவி ஜோஸ்பின், 22; சில ஆண்டுக்கு முன், தம்பதிக்குள் கருத்து வேறுபாடால், தர்மபுரி மேட்டுத்தெருவிலுள்ள தாய் வீட்டில் ஜோஸ்பின் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் வடிவேல், குடும்பம் நடத்த அழைத்த போது, ஜோஸ்பின் மறுத்ததால், ஆத்திரமடைந்த வடிவேல் அருகிலிருந்த கொடுவாளை எடுத்து சரமாரியாக அவரை வெட்டினார். படுகாயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கணவர் வடிவேலுவை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.