தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 'திட்டங்களை பெற்று வளர்ச்சி பாதையில் பென்னாகரத்தை கொண்டு செல்வேன்'

'திட்டங்களை பெற்று வளர்ச்சி பாதையில் பென்னாகரத்தை கொண்டு செல்வேன்'

'திட்டங்களை பெற்று வளர்ச்சி பாதையில் பென்னாகரத்தை கொண்டு செல்வேன்'


ADDED : ஏப் 16, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பென்னாகரம்: ''அரசின் பல்வேறு திட்டங்களை பெற்று, பென்னாகரம் தொகு-தியை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வேன்,'' என, காங்., வேட்பாளர் தமிழ்குமரன் பேசினார்.

பென்னாகரம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்., கட்சியை சேர்ந்த தமிழ்குமரன் போட்டியிடு-கிறார். இவர், நேற்று முன்தினம் ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரியூர், நெருப்பூர், ஒட்டனுார், நாகமரை, இராமகொண்டஅள்ளி, பூச்சூர், செல்லமுடி உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட கிராமங்-களில், 'கை' சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் மேற்-கொண்டார்.

அப்போது, வாக்காளர்களிடம் அவர் பேசியதாவது:திரைப்பட துறையில் பல்வேறு நவீன மாற்றங்களை எண்ணி, அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் திரைப்பட தயாரிப்-பாளர் சங்க தேர்தலில், என்னை வெற்றிபெற செய்தனர். அதே-போல, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அதிக வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் சிறப்பான ஆட்-சியை தந்துள்ளார். அவர், அறிவித்த சேலம் - தர்மபுரி மாவட்டத்-தையும் இணைக்கும் வகையில் ஒட்டனுார் - கோட்டையூர் பாலத்தை கொண்டு வருவேன். தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டம் அமைந்த வுடன், ஏரியூர் ஒன்றியத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தாராள-மாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுய உதவி குழுக்கள், 5 லட்சம் வரை கடன் பெறுதல் உள்ளிட்ட பல்-வேறு திட்டங்களை பெற்று பென்னாகரம் தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல எனக்கு, 'கை' சின்னத்தில் ஓட்ட-ளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது, தி.மு.க., மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், வி.சி.க., மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us