/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் வீடு புகுந்து நகை, பணம் பறிப்பு; முகமூடி கும்பல் அட்டூழியத்தால் மக்கள் பீதி

ADDED : மே 08, 2024 04:45 AM
தர்மபுரி : தர்மபுரி அருகே இரு வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையர், 7.5 பவுன் நகை 47,000 ரூபாயை பறித்து சென்றனர். ஒரு வீட்டில் தடுக்க முயன்றவரை கொள்ளை கும்பல் தாக்கியதில், படுகாயம் அடைந்தார்.
தர்மபுரி அருகே மொன்னையன் கொட்டகையை சேர்ந்தவர் சின்னசாமி, 45; டாஸ்மாக் கடை ஊழியர். இவர் மனைவி சாந்தி, 40; நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். நள்ளிரவில் முகமூடி அணிந்த இருவர் வீட்டுக்குள் புகுந்து, 47,000 ரூபாய், இரு மொபைல் போன்களை திருடியுள்ளனர். சத்தம் கேட்டு சாந்தி சென்றபோது, அவர் போட்டிருந்த, 7.5 பவுன் தாலிக்கொடியை பறித்து தப்பினர்.
அதேபகுதியில் பென்னாகரம் சாலையில் நந்தி நகரை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 39; இவர் மனைவி ரேவதி, 32; நேற்று முன்தினம் இரவில் முகமூடி அணிந்த நான்கு பேர் நள்ளிரவில் கதவை தட்டியுள்ளனர். ரேவதி வெளியே வந்தபோது, தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். சத்தம் கேட்டு வந்த ராஜிவ்காந்தியை முகமூடி கொள்ளையர் கற்களால் தாக்கியதில், படுகாயம் அடைந்தார். இரு சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இரு வீடுகளிலும் தர்மபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், நேற்று ஆய்வில் ஈடுபட்டார். நகரை ஒட்டிய பகுதியில் இரு வீடுகளில் முகமூடி கொள்ளையர் கைவரிசை காட்டியதுடன், ஒருவரை கடுமையாக தாக்கியது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.