/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.4 லட்சத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் திறப்பு
/
ரூ.4 லட்சத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் திறப்பு
ரூ.4 லட்சத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் திறப்பு
ரூ.4 லட்சத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் திறப்பு
ADDED : ஜன 16, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நாகர்கூடல் பஞ்.,ல் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதி, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் முன்னாள் பஞ்., தலைவர் குமார் சொந்த நிதியாக, 3 லட்சம் ரூபாய் என, 4 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முன்னாள் பஞ்., தலைவர் குமார் தலைமை வகித்து, விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். இதில் ராஜ்குமார், முரளி, மோகன்ராஜ், பாலாஜி, சுரேஷ், கீதா உட்பட ஊர் முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், பள்ளி கல்லுாரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.