/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 32,000 கன அடியாக அதிகரிப்பு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 32,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 32,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 32,000 கன அடியாக அதிகரிப்பு
ADDED : அக் 26, 2024 06:34 AM
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 32,000 கன அடியாக அதிகரித்ததால், நேற்று, 13வது நாளாக குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை தொடர்கிறது.
கர்நாடகா நீர்பிடிப்பு மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, கேம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 35,000 கன அடியாக அதிகரித்தது. அது மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 32,000 கன அடியாக வந்து கொண்டிருந்தது.
இதனால், ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் நலன் கருதி தொடர்ந்து நேற்று, 13வது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை தொடர்கிறது. பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் சின்னாற்றில் தண்ணீர் வரத்தாகி காவிரியாற்றில் கலக்கிறது.