ADDED : ஆக 17, 2026 03:24 AM

அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 80வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் முருகேசன் தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். செயலாளர் பிரு ஆனந்த்பிரகாஷ் முன்னிலை வகித்து, சாரண, சாரணியர், பசுமை படை மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவையொட்டி மாணவ, மாணவியரின் ஆடை அலங்கார போட்டியும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. தேசத்தலைவர்களின் வேடமணிந்து வந்த மாணவர்களுக்கும், விளையாட்டு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
