/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்
/
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்
ADDED : மே 04, 2025 01:19 AM
ஒகேனக்கல்:இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலக்குழு கூட்டம், ஒகேனக்கல்லில் நேற்று துவங்கியது.
மாநில தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சிங்காரவேலன் சிறப்பாளராக பங்கேற்றார். இதில், பொதுத்துறைகள் முழுதும் தனியார்மயமாக்கப்பட்டு விட்டது.
அரசு துறைகளில் ஒப்பந்த முறையிலான வேலை வாய்ப்பு, அவுட்சோர்சிங் முறையை மத்திய, மாநில அரசுகள் வேகமாக செய்து வருகிறது. அனைத்து துறைகளிலும் கார்ப்பரேட் மயமாக்குவதன் விளைவாக இடஒதுக்கீடு பறி போகிறது.
இந்நிலையில், அனைத்து தனியார் துறைகளிலும், வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி ஜூன் 14ல், சென்னையில் சிறப்பு மாநாடு நடத்துவது என, இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.