தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தேர்தல் பணி ஆசிரியைகளுக்கு அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்

தேர்தல் பணி ஆசிரியைகளுக்கு அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்

தேர்தல் பணி ஆசிரியைகளுக்கு அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்


ADDED : மார் 23, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 07:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: ''தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியைகளுக்கு தேவையான அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தர வேண்டும்,'' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் கூறினார்.

தர்மபுரி மாவட்டம், அரூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியைகள் மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் ஒட்டுச்சாவடியில் கழிப்பறை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அந்த இடத்திற்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தேர்தல் கமிஷன், ஆசிரியர்களில் நோயுற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, தேர்தல் பணியில் விலக்கு அளித்துள்ளது. ஆனால், தேர்தல் அலுவலர்கள் அது போன்ற ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பதில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us