/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் வாணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
/
அரூர் வாணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
அரூர் வாணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
அரூர் வாணியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2024 06:47 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ளது சித்தேரி மலை.
கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் இருந்து, உருவாகும் வரட்டாறு, வள்ளிமதுரை, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி வழியாக, அரூரிலுள்ள வாணியாற்றில் சேர்கிறது. இந்நிலையில், வாணியாறு, வரட்டாறு இரண்டும் சேருமிடத்தில், தடுப்பணை கட்ட, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது:மழைக்காலங்களில் முள்ளிக்காடு வாணியாறு அணை நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் உபரி நீர், அரூர் வாணியாற்றில் செல்கிறது. அதேபோல், வரட்டாறு தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், வரட்டாறு வழியாக, அரூர் அம்பேத்கர் நகர் அருகேயுள்ள, வாணியாற்றில் சேர்கிறது. இந்த இரு ஆறுகளும், சேருமிடத்தில் தடுப்பணை கட்டினால், சுற்று வட்டார பகுதிகளிலுள்ள பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெறுவதுடன், அரூர் நகரில் குடியிருப்பு பகுதிகளிலுள்ள ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டமும் உயரும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், தடுப்பணை கட்டுவது குறித்து, பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இதுவரை பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை. எனவே, வாணியாறு, வரட்டாறு இரண்டும் சேருமிடத்தில், தடுப்பணை கட்ட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.