ADDED : ஏப் 13, 2025 05:04 AM
தர்மபுரி: --நீட் தேர்வு மே, 4 அன்று நடக்கிறது. இதில், தர்மபுரி மாவட்-டத்தில், 5 இடங்களில் உள்ள, 8 மையங்களில், 4,800 மாண-வர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதில், செட்டிகரையிலுள்ள, கேந்திர வித்யாலயா பள்ளியில் அமைத்துள்ள மையத்தில், 480 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதை, மாவட்ட கலெக்டர் சதீஸ் ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்க-ளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தடையின்றி தேர்வு எழுதுவதற்கான அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சாய் தளம், சக்கர நாற்காலி மற்றும் மருத்துவ முதலுதவி உபகரணங்கள் குறித்தும், தேர்வெழுதும் அறையில் மின் விளக்கு, மின் விசிறி மற்றும் தேர்வு எழுதும் மேஜைகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார். இதில், ஆர்.டி.ஓ., காயத்ரி, மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

