/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு
/
ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு
ADDED : ஏப் 20, 2025 01:38 AM
பாலக்கோடு:
பாலக்கோட்டிலுள்ள, ஐஸ்கிரீம் மற்றும் குல்பி ஐஸ் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் விற்பனை நிலையங்களில், உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில், கோடை காலம் துவங்கிய நிலையில், மாவட்டத்தில் குடிநீர், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றின் தரம் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், பாலக்கோட்டிலுள்ள குடிநீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், ஐஸ்கிரீம் தயாரிப்பு உபகரணங்கள், மூலப்பொருள்கள் தயாரிப்பு மற்றும் முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண் போன்ற விபரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதில், பாலக்கோடு புதுபட்டாணியர் தெருவில் ஆரஞ்சு, லெமன் மற்றும் பாதாம் உள்ளிட்ட குளிர்பானங்கள் உரிய விபரங்கள் அச்சிடப்படாமல் தயாரித்ததை பறிமுதல்
செய்து அழித்தனர்.